In the name of Allah the most gracious, the most merciful

ஸில்ஸிலா ஷாஹியா அஸ்ராரியாவுடைய
இமாம் (ரஹ்) அவர்களின் சேவைகளும் வழமையும்

இமாம் (ரஹ்) அவர்களுடைய அழைப்பும் சமுதாயச் சீர்திருத்த நடவடிக்கைகளும் :

20 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இமாம் (ரஹ்) அவர்களின் சீர்திருத்த நடவடிக்கைகளின் காலமாகும். இஸ்லாமிய சமுதாயத்தை சீர்திருத்துவது, மனிதவர்க்கத்துக்கு இமாம் (ரஹ்) அவர்கள் புரிந்த முக்கிய சேவைகளில் ஒன்றாகும்.


இந்த காலக் கட்டத்தில்தான், கிழக்கத்திய தேசங்களும் அவைகளின் இனத்தவர்களும், மேற்கத்திய நாடுகள் மற்றும் அதைச் சார்ந்த இனத்தவர்களின் நச்சு போன்றதும் தொத்துவியாதி போன்ற கோட்பாடுகளான உலகாசை, பொருளாசை, மதக்கோட்பாடுகளையும் அவைகளின் பேரில் இருக்கவேண்டிய நம்பிக்கை யாவையும் உதாசீனம் செய்தல், அல்லாஹ்வின் பேரில் நம்பிக்கையின்மையும், லோகாதய விஷயங்களின் பேரில் இச்சையும் பேராசையும் ஆகிய தீய அலைகளால் கவரப்பட்டவர்களாக இருந்தனர்.

சமுதாயங்கள் அனைத்திலும் இஸ்லாமிய சமுதாயமே தம்முடைய ஆத்மீகத்திலும் அறிவார்த்தத்திலும் மிகவும் பாதிக்கப்பட்டதாக இருந்தது.


மேற்கத்திய உலகின் விஷ அலைகளால் முஸ்லிம் சமுதாயம் எல்லா வகையிலும் பாதிப்படைந்ததோடு, மதக்கோட்பாடு மற்றும் அல்லாஹ்வின் பேரில் அன்பு இவற்றையெல்லாம் இழந்து, லோகாதய விஷயங்களின் பேரில் இச்சையும் ஆசையும், பொருளாசையும், ஆடம்பரங்களும் கேளிக்கைகளின் பேரில் நாட்டமுள்ளவர்களாகவும் போஜனப் பிரியர்களாகவும், தற்பெருமையும் அகந்தையும் கொண்டவர்களாகவும், ஆட்சி அதிகாரங்களின் பேரில் நாட்டமும் ஆகியவைகளே இஸ்லாமிய சமுதாயத்தினரின் வாழ்க்கையின் குறிக்கோளாக இருந்தன. இவைகளைத் தவிர மற்றவையாவும், அதாவது உண்மையான படைப்பாளனும் அதிபதியுமான அல்லாஹ்வைப் பற்றியும், மறு உலக வாழ்க்கை இவைகளைப் பற்றிய சிந்தனைகள் யாவும் பலஹீனமாகியிருந்தன.


இந்தக் காலம் ஒரு இருள் சூழ்ந்த மோசமான காலமாக இருந்தது. அதாவது அறிவு ஜீவிதமும் மிதவாதமும் ஆகியவைகளே வாழ்வின் வழியாகக் கருதப்பட்டடது. இவைகளெல்லாம் மேலேங்கியிருந்த காலத்தில் தான் இமாம் (ரஹ்) அவர்கள் மனித வர்க்கத்ததுக்கு ஆத்மீக வாழ்க்கையின் பக்கம் அழைப்பு விடுத்ததோடு, நம்முடைய சகல காரியங்களையும் நம்முடைய ஆத்மா மற்றும் கல்பு இவைகளைச் சார்ந்தேயிருக்கவேண்டும் என்பதை வலியுறுத்தினார்கள். நம்முடைய சகல லோகாதய, ஆத்மீக காரியங்கள் யாவும் அல்லாஹ்வுக்காக மட்டும், மற்றும் அவனுடைய சந்தோஷத்துக்காக மட்டும், அவனுடைய பொருத்தத்தை நாடுவது ஆகியவைகளுக்காக மட்டுமே இருக்க வேண்டும் என்பதே இமாம் (ரஹ்) அவர்களுடைய அழைப்பின் மற்றும் போதனைகளின் சாரமாக இருந்தது. இக்கடமைகள் ஒருவர் நிறைவேற்றும் பொழுது அதில் எந்த விதமான சுயநலமோ தன்னிச்சையோ உலகாதய எண்ணமோ இருக்கக்கூடாது என்றும் வலியுறுத்தினார்கள்.


யாவரையும் இந்த அகிலத்தை படைத்தவனும் அதிபதியுமான கருணையாளனுமான அல்லாஹ்வின் பேரில் அன்பு கொள்வதின் பக்கமே இமாம் (ரஹ்) அவர்கள் அழைத்தார்கள். இந்த நிலையற்ற உலகம் மற்றும் அதன் நிலையில்லாத பொருள்களின் பேரில் உள்ள இச்சைகளிலிருந்தும், இந்த அற்பவாழ்வின் பேரில் பற்றுகளிலிருந்தும் விடுபடும்படி யாவரையும் வலியுறுத்தினார்கள்.


எப்பொழுதும் நிலைத்திருக்கக்கூடிய நிம்மதி, சுகம் பேரின்பம், திருப்தி,அமைதி இவைகளை நாடுபவர்களுக்கு அதற்கான வழியையும் காண்பித்தார்கள்.நியாயத் தீர்ப்பு நாளின் போது யாவரையும் தம்மை பரிசுத்த ஆத்மாவுடன் அல்லாஹ்வின் திருச்சமூகத்தில் நிற்கத்தகுதியுடையவர்களாக ஆக்கிக் கொள்வதற்கான வழியைக் காண்பித்ததோடு இதன்படி நடப்பவர்களை அவர்களுடைய சகல லோகாதய கவலைகளிலிருந்தும் விடுவித்து தன்னுடைய (இமாம் ரஹ்) துஆவைக்கொண்டும் கிருபையைக்கொண்டும் அருள்புரிந்தார்கள்.


வெறும் வார்த்தைகளால் மட்டுமின்றி, இமாம் (ரஹ்) அவர்கள் தன்னுடைய ஆத்மீக சத்தியைக் கொண்டும் தன்னுடைய நிஸ்பத்தை (ஆத்மிக அலைகளை) கொண்டும், அல்லாஹ்வின் அன்பையும், நெருக்கத்தையும் நாடுகின்ற யாவருடைய ஆத்மா, அகம் கல்பு இவைகளை அல்லாஹ்வின் பக்கம் கவனம் செலுத்தக்கூடிய தன்மையும், அமைதியும், சாந்தியும் உள்ளவைகளாக ஆக்கிவைத்தார்கள்.


உண்மையான நாட்டமுள்ளவர்கள் யாவரும் இமாம் (ரஹ்) அவர்களால் தாங்கள் பெற்ற நற்பலன்களைக் கொண்டு முழு திருப்தியடைந்தனர். சாமான்யர்களும் சாதாரண மக்கள் கூட இமாம் (ரஹ்) அவர்களின் சமூகத்தில் அண்மியிருந்ததற்கான பலனை அடையாமல் போகவில்லை. இமாம் (ரஹ்) அவர்களின் மரித்துப்போன கல்புகளை உயிருள்ளவைகளாக மாற்றினார்கள்.


ஆத்மாவையும் துடிப்புள்ளதாக ஆக்கினார்கள். இமாம் (ரஹ்) அவர்களின் உபதேசங்களின் மூலம் யாவரும் தட்டியெழுப்பப்பட்டவர்களானார்கள்.

உதாரணமாக:


1. இமாம் (ரஹ்) அவர்கள் இஸ்லாத்தை அறிமுகப்படுத்தும்பொழுது “அல்லாஹ் ஸீப்ஹானஹு வத அஃலாவை மட்டும் வணங்குங்கள் ” எனும் ஏகத்துவக் கொள்கையான இறைவன் ஒருவனே என்பதை பின்வருமாறு விளக்கினார்கள் :

“அல்லாஹ் (ஸூப்) மனிதனின் அகத்துள் ‘அன்பு’ எனும் உணர்வை ஒரு அமானிதப் பொருளாக வைத்துவிட்டு இந்த அன்பு எனும் விலை மதிப்பற்ற அமானிதத்தை தனக்கே திருப்பிக் கொடுக்க வேண்டும், வேறு யாருக்கும் கொடுக்கக்கூடாது என விதித்துள்ளான். அதே சமயத்தில், அல்லாஹ் (ஸூப்) அளவற்ற ஆசைகளையும் தூண்டுதல்களையும் உடைய “நஃப்ஸையும் ” மனிதனுடைய அகத்தினுள்ளே வைத்துள்ளான். இந்த “நஃப்ஸானது” மனிதனைக் கவர்ந்து தன் வசம் இழுக்கவல்லது. இந்த “நஃப்ஸ்” “அன்பு” இவ்விரண்டுக்கும் இடையே நல்லதையும் கெட்டதையும் உணரும் பகுத்தறிவையும் ஞானத்தையும், அளித்துள்ளான். அன்பு எனும் அமானிதத்தை, தனக்கே திருப்பிக் கொடுக்கவேண்டும் எனும் குறிக்கோளையும் மனிதனுக்கு இறைவன் தெளிவாக்கியுள்ளான், மேலும் அல்லாஹ் (ஸூப்) கணக்கற்ற ஒளித்திரைகளுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு தன்னை மறைத்துக் கொண்டான். நஃப்ஸையும் அதன் எல்லை இல்லா இச்சைகளையும், தூண்டுதல்களையும், கீழான இன்பங்களையும் வெற்றிகொள்வதற்காக ‘லா இலாஹ்’ எனும் வாளைக்கொண்டு அவைகளை நாசமாக்கி, கல்பின் உள்ளே அல்லாஹ் என்பதைத் தரிபடுத்துவதே இஸ்லாம்” எனப்படும் தத்துவத்தைப் போதித்தார்கள்.


2. மற்றொரு சந்தர்ப்பத்தில் ‘ஷிர்க்’ (இணை வைத்தல்) என்பதைப் பற்றி தூஷித்துக் கூறியதாவது:

“அல்லாஹ் (ஸூப்) மிகவும் மாண்புள்ளவன், தன்னுடைய உள்ளமையோடு வேறு எந்த வஸ்துவையும் உள்ளமையாக ஏற்றுக் கொள்ளவேமாட்டான். ‘ஷிர்க்’ எனும் இணைவைத்தல் பாவங்களிலே மிகவும் கொடிய பாவமாகும். அது பகிரங்கமானதாக இருந்தாலும் சரி, அந்தரங்கமானதாக இருந்தாலும் சரியே, அல்லாஹ் (ஸூப்) இவ்விரண்டையும் சகித்துக் கொள்ளவேமாட்டான். எதுவரை மனிதன் தன் மனதில் அல்லாஹ்வைத் தவிர வேறு வஸ்துக்களின் பேரில் அன்பு கொள்கிறானோ, அல்லாஹ்வைத் தவிர வேறு மற்றவைகள் தன் தேவையைப் பூர்த்தி செய்வார்கள் என்று நம்புதல், மற்றும் தூண்டுதல்கள் இச்சைகள் இவையாவற்றிலிருந்து விடுபடவில்லையோ அதுவரை அல்லாஹ் (ஸூப்) அந்த மனிதனை நேசிப்பதுமில்லை அவனைப் பற்றி அக்கறை கொள்வதுமில்லை”


3) இமாம் (ரஹ்) அவர்கள் கீழ்த்தரமான இவ்வுலகத்தின் பிடியிலிருந்து நீங்கி, அல்லாஹ்வின் பேரில் அன்பும், தான் அவனுடைய அடிமை எனும் நினைவுடன் அவனை வணங்கவேண்டும் என்பதை விளக்கும் வகையில் கூறியதாவது:

“அல்லாஹ் (ஸூப்) தன்னுடைய தெய்வீகக் கிருபையையும் அருளையும் கொண்டு, நம்மைப் போன்ற அசிங்கமான, கீழ்த்தரமான மனிதர்கள் மீது கவனம் செலுத்துகிறான். ஆனால் நாமோ இந்த அல்லாஹ்வின் கிருபா கடாட்சத்தைப் பெற்றுக்கொள்ள அவனை நோக்கி விரைந்தோடுவதற்குப் பதிலாக, அல்லாஹ்வால் வெறுக்கப்பட்ட இந்த நிலையில்லாத, இழிவான உலகை நோக்கி ஓடுகிறோம். இந்த உலகம் தன்னைப்போல், தன்னை நேசிக்கிற மனிதர்களை அழித்து ஒழித்துவிடும்.


4. இமாம் (ரஹ்) அவர்கள் நாம் அல்லாஹ்வின் பேரில் கடைப்பிடிக்க வேண்டிய நேர்மை, கீழ்ப்படிதல் மற்றும் அல்லாஹ்வின் பற்று (இக்லாஸ்) இவைகளைப் பற்றி கூறியதாவது:

“நம்முடைய ஒவ்வொரு செயலிலும் அசைவிலும் அல்லாஹ்வின் பொருத்தம் உள்ளதா என சிந்திக்க வேண்டும். அப்பொழுதுதான் அல்லாஹ் நம்மீது சந்தோஷப்பட்டு நம் செயல்களை ஏற்றுக்கொள்வான். நம்முடைய எந்த ஒரு செயலும் காரியமும் அல்லாஹ்வின் கோபத்துக்குக் காரணமாகிவிடக் கூடாது என்பதில் நாம் மிக ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். நம்முடைய அன்றாட அலுவல் மற்றும் உழைப்பு, நம்முடைய வியாபார காரியங்கள், நேர்மையான சம்பாத்தியம், சத்தியம் தவறாமை, பிறரை வஞ்சித்தல் மற்றும் மோசம் செய்தல் தடுக்கப்பட்ட (விலக்கப்பட்ட) விஷயங்கள் இவையாவிலிருந்தும் நாம் நம்மைத் தவிர்த்து ஒதுங்கி வாழ்வது யாவும் அல்லாஹ்வின் சந்தோஷத்துக்கும் அவனுடைய பொருத்தத்தை நாடி மட்டுமே இருக்க வேண்டும். அவ்வாறில்லாவிடில் நம்முடைய உழைப்பு மட்டும் எல்லா பிரயாசைகளும் வீணாகிவிடும். எல்லா சந்தர்ப்பங்களிலும் அல்லாஹ்வின் பொருத்தத்தை நாம் பெறவேண்டும்”
ஆகையால் நமக்கு பலனைப்பற்றிய இச்சையோ ஆசையோ, அல்லது இழப்பு பற்றிய பயமோ இருக்கக்கூடாது. நம்முடைய எதிர்பர்ர்ப்பும் நோக்கமும் அல்லாஹ்வின் கோபத்தை பெற்றுக் கொள்ளக்கூடாது எனும் பயத்தின் பேரிலும் இருக்கவேண்டும். இதுவே அல்லாஹ்வைப் பயந்துகொள்ளல் மற்றும் கட்டுப்பாடுடன் கூடிய வாழ்க்கை நிலையாகும். இதுவே உளப்பூர்வமான நேர்மை நிலையாகும். இந்நிலையில் வெளிப்படையான மற்றும் மறைந்த ‘ஷிர்க்’ யாவும் அழிந்துபோகும். ‘நப்ஸ்’ வுடைய ஆதிக்கத்தின் பேரிலும் வெற்றி காணலாம்.


5. லோகாதய இச்சை மற்றும் பொருளாசை மிகுந்திருந்த காலக் கட்டத்தில் மக்களை ஆத்மீகத்தின் பால் அழைக்கும் முகமாக இமாம் (ரஹ்) அவர்கள் கூறியாதாவது

“வாருங்கள் ! நான் உமக்கு ஆத்மீகத்தின் தாத்பர்யத்தைப் பற்றி விளக்குகிறேன், ஆத்மீகம் யதார்த்தமானதா அல்லது கட்டுக்கதையா என்பது பற்றி. நீங்கள் உங்கள் கவனத்தைச் செலுத்தினால் ஆத்மீகத்தின் பேரில் உங்களுக்கு பற்றும் ஆசையும் ஏற்பட்டுவிடும். அதன் யதார்த்த உண்மைப் பெற்றுக்கொள்வதற்கான பிரயாசையிலும் முயற்சியிலும் ஈடுபட ஆரம்பித்துவிடுவீர்கள்”

அல்லாஹ் (ஸூப்) மனிதவர்க்கத்தை கீழ்க்கண்ட 10 நுட்பங்களோடு படைத்துள்ளான். அவையாவன:


1. கல்பு (இதயம்) 2. ரூஹ் (ஆத்மா) 3. சிர்ர், 4. ஃகஃபி. 5. அஃக்ஃபா 6. நஃப்ஸ் 7. பாத்(காற்று) 8. நார்(நெருப்பு) 9.மாஅ(நீர்) 10.காக் (மண்) ஸூஃபியாக்கள் இந்தப் பத்துப் பிரிவுகளையும் பத்து நுட்பங்கள் (லத்திபேஃ) என அழைக்கின்றனர்.


“ரூஹ்ஐத் (ஆத்மா) தவிர, மற்ற எல்லா நுட்பங்களையும் கல்பு எனும் நுட்பம்தான் தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் வைத்திருக்கிறது. நமது உடலில் மற்ற அவயவங்கள் யாவும் இந்த “கல்ப்” எனும் நுட்பத்திலிருந்தே தமக்குத் தேவையான போஷாக்கைப் பெறுகின்றன. ஆத்மீகத்தினர்கள் தொடர்பும் இந்த கல்போடு உள்ளது”


“லோகாதயத்தை ஒப்புக்கொள்பவர்களே! நீங்கள் மிகப்பெரியது என எண்ணிக்கொண்டிருக்கும் மூளையின் சக்தி ஒரு வரம்புக்கு / எல்லைக்கு உட்பட்டது. இதன் எல்லைக்கு மேல் நீங்கள் ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியாது. மேலும் இது ஒர் அப்பட்டமான உண்மை, அதாவது கல்பானது நச்சுத்தன்மை பொருந்திய இரத்தத்தை மூளையின் ஒர் நரம்பில் செலுத்திவிடுமாயின். அந்த நரம்பு பிரயோஜனமற்றதாகிவிடும். அதனால் உங்களுடைய ஆராய்ச்சிகளெல்லாம் முடிவடைந்து பயனயற்றதாகிவிடுவதோடு உங்களை பைத்தியக்கார விடுதியில் சேர்க்கவேண்டிய துர்நிலையும் ஏற்பட்டுவிடும். ஆனால் ஆத்மீகத்தோடு சம்பந்தப்பட்ட கல்புக்கு அல்லாஹ் (ஸூப்) அளவற்ற எல்லையில்லாத வியாபகத்தன்மையை அருளியுள்ளான்.


“மூளைக்கு பிரமிக்கத்தக்க சக்திகள் இருந்தும், அதைக்கொண்டு எவ்வளவோ முன்னேற்றங்கள் இருந்தும், இந்த மூளையானது ஆரம்ப முதற்கொண்டே கல்பின் ஆதிக்கத்தின் கீழேயே இயங்கிவருகின்றது. மூளைக்கு நல்ல சுத்தமான இரத்தத்தை செலுத்துவதே கல்பின் மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். எப்பொழுது கல்பானது மூளைக்கு சுத்தமற்ற இரத்தத்தை அனுப்புகிறதோ அப்பொழுது மூளையானது செயலற்றுப் போகும். கல்புடைய ஆதிக்கத்தின் கீழ் மூளை இருப்பது போல் ரூஹ்வுடைய ஆகிக்கத்தின் கீழ் கல்பு உள்ளது. ரூஹூ உடலை விட்டு நீங்கிவிடுமாயின் கல்பும் செயலற்றுவிடும்.அப்பொழுது தான் மரணமும் சம்பவிக்கும். ருஹூதான் இந்த உடலின் அரசன். ரூஹூடைய ஆதிக்க வட்டம் மிகவும் பரந்ததும் வியாபித்ததுமாகும். இது அல்லாஹ் (ஸூப்) வுடைய அரியாசனத்தை ஏன் அல்லாஹ்வையே சென்றடையக் கூடியதாக இருக்கிறது. ரூஹானது படைப்பாளனாகிய அல்லாஹ்(ஸூப்) வை சென்றடைந்து ஒரு விஷேமான தொடர்பையும் இணைப்பையும் அல்லாஹ்வோடு ஏற்படுத்திக் கொள்ளும் சக்தியே ஆத்மீக சக்தியாகும். இது ஒரு பெரிய அரிய செல்வமாகும்.


அல்லாஹ்வுக்கு மிக நெருங்கிய இறை நேசர்களான ஆன்மீக ஞானிகளுக்கு எவ்வளவு ஆன்மீக சக்தி இருக்கிறது, என்றால், இவர்கள் ஒரு மலையைக் கூர்ந்து நோக்கினால் அது வெடித்து துண்டுகளாகச் சிதறி விடும். ஆனால் அவர்கள் தங்களுடைய ஆன்மீக சக்தியை வீணான காரியங்களில் விரயம் செய்வதில்லை, அந்தப் பெரியார்கள் தங்கள் ஆன்மீக சக்தியால் மரித்துப்போன கல்புகளை விழிப்படையச் செய்கிறார்கள், ஆன்மாக்களை ஜீவனுள்ளதாக ஆக்கி விடுகிறார்கள். மனிதர்களுடைய கல்பில் மண்டிக்கிடக்கும் அழுக்கை நீக்கி, இருள்களை அகற்றி களிப்பூட்டி விடுகிறார்கள். பரிசுத்தமான கல்புகளை அல்லாஹ்வின் சமூகத்தில் சமர்ப்பிப்பதற்கான தகுதி படைத்ததாகவும் ஆக்கி விடுகிறார்கள். தேவைப்படும் போது தங்களுடைய ஆத்மீகச் சக்தியைப் பயன்படுத்தி லோகாதய காரியங்களையும் சீர்படுத்தி இருக்கிறார்கள்.

Central Khanquah Asrariya, Azamgarh,UP,India. All rights reserved throughout the world.

Comprare VPXL Comprare Red Viagra Comprare Cialis Jelly Comprare Levitra With Dapoxetine Comprare Cialis Super Comprare Kamagra Jelly Comprare Propecia Comprare Viagra Comprare Viagra Professional Comprare Cialis Professional Comprare Female Viagra Comprare Levitra Comprare Viagra Super Comprare Viagra Gold Comprare Kamagra Gold Comprare Tadalis SX Comprare Cialis Comprare Priligy Comprare Kamagra in nederland hvor kjøpe generisk cialis på nett i Norge
adidas yeezy adidas superstar adidas yeezy 350 boost adidas nmd r1 adidas superstar damen adidas tubular adidas nmd adidas zx flux damen adidas tubular nova adidas zx flux adidas gazelle homme adidas stan smith pas cher adidas superstar pas cher adidas nmd r1 adidas yeezy boost 350 prix adidas superstar femme adidas stan smith femme adidas yeezy boost 350 adidas nmd runner adidas gazelle femme in nederland hvor kjøpe generisk cialis på nett i Norge