ஸில்ஸிலா ஷாஹியா அஸ்ராரியாவின் தற்போதைய
வழிகாட்டி
அல்ஹாஜ் ஹஜ்ரத் ஷா இஹ்சானுல்ஹக்
கான்
சாஹிப் மத்தஜில்லஹூ
அல்ஹாஜ் ஹஜ்ரத் ஷாஹ் இஹ்ஸானுல் ஹக் கான் ஸாஹிப் மத்த ஜில்லஹூ:
ஹஜ்ரத் அவர்கள், இந்தியாவின் உத்தர பிரதேச மாகாணத்தில், ஆஜம்கட் எனும் ஊரில் 1970ம் வருடத்தில் பிறந்தார்கள். குழந்தைப் பருவத்திலிருந்தே மேன்மையும் மகாத்மியமும் பொருந்திய ஆத்மீக இறைநேசர்களின் ஆதரவும் அரவணைப்பின் கீழும் வளர்ந்து வந்தார்கள். இவரது மதிப்பிற்குரிய தாயார் ஒரு இறைநேசப் பெண்மணியாகவும், திருக்குர்ஆனை மனனம் செய்த ‘ஹாபிஸô’வாகவும் இருந்தார்கள். இரண்டரை வருடங்களே தாயின் மடியில் இருந்தார்கள். தாயாரின் மறைவுக்குப்பின், இவரது தாய்வழிப் பாட்டனார் (நாநாஜான்) அல்ஹாஜ், அல்ஹாபிஸ், ஹஜ்ரத் மௌலானா முஹம்மத் ஸயீத் கான் சாஹிப் (ரஹ்) அவர்களுடைய பராமரிப்பில் வளர்ந்து வந்தார்கள். நாநாஜான் (ரஹ்) அவர்கள் அக்காலத்திய ‘குத்புல் இர்ஷாத்’ ஆக இருந்தார்கள்.1976 ம் ஆண்டு, ஜனவரி மாதம் 30 ந் தேதி நாநாஜான் (ரஹ்) அவர்களுடைய மறைவுக்குப் பின் தன்னுடைய மூத்த சகோதரரும் அக்காலத்திய “கௌஸ்” மற்றும் இமாமான (ஆத்மீக வழிகாட்டியான) அல்ஹாஜ் மௌலானா அஸ்ராருல் ஹக் கான் சாஹிப் (ரஹ்) அவர்களுடைய கவனத்தின் கீழும் வளர்ப்பிலும் இருந்து லோகாதய மற்றும் ஆத்மீக கல்விகளிலும் தேர்ச்சியும் திறமையும் உள்ள நிலையை அடைந்தார்கள்.
1976 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் 1997 மார்ச் வரை 21 வருட காலம் தன்னுடைய மூத்த சகோதரர், இமாம் ஷைக் சாஹிப்(ரஹ்) அவர்களுடைய சமூகத்தில் அண்மியிருந்து அன்னாருக்கு சேவை புரிந்துகொண்டும், அவரது பொதுவான மற்றும் விசேஷ பிரச்சார கூட்டங்களில் அவருடனிருந்து அவரது அருட்பார்வையையும் கிருபையையும் பெற்று வந்தார்கள். இமாம்(ரஹ்) அவர்களுக்கு அவரது தனி அறைக்கு உணவு மற்றும் அவர்களுக்கு தேவையான அனைத்து பொருட்களைக் கொண்டு செல்லவும், மறுபடி அங்கிருந்து பொருட்களை எடுத்துச் செல்லும் பொறுப்பை தம் சிரமேற் கொண்டிருந்தார்கள். இவ்வாறாக இமாம் (ரஹ்) அவர்களின் தனித்திருக்கும் அறைக்கு அடிக்கடி போக வர இருந்ததால் ஷெய்க்காமில் இமாம்(ரஹ்) அவர்களின் வழமையான காரியங்களும், அன்னாரது தன்மைகள் மற்றம் அவரது மதாச்சாரங்கள் லோகாதய காரியங்கள் யாவைப் பற்றிய விஷயங்களை இமாம் (ரஹ்) அவர்களுக்கு மிக அருகில் இருந்து
நன்கு கவனித்துப் பார்த்து அறிந்து கொள்ளும் சிறப்பான வாய்ப்பு பெற்றவராக இருந்தார்கள். இமாம் (ரஹ்) அவர்களும், தனது சிறிய சகோதரரும் தற்போதைய இமாமுமான ஹ்ஜ்ரத் இஹ்ஸானுல் ஹக் கான் சாஹிப் மத்தஜில்லஹூ அவர்களின் ஆத்மீகம் மற்றும் பண்பாடுகளை மேலோங்கச் செய்வதில் அதிக அக்கரையுள்ளவர்களாக இருந்ததோடு அவருக்கு சகல அகமியங்களையும் பரகசியங்களையும் அறிவித்ததோடு புரியாதவைகள் யாவையும் புரிய வைத்தார்கள். இவ்வாறாக இமாம் ஷைக் (ரஹ்) அவர்களின் இடைவிடாத தொடர்பு மற்றும் நெருக்கமாக இருந்து வருகையில் அந்த சிறப்பான வேளையும் வந்தது, அதாவது இமாம் (ரஹ்) அவர்கள் ஹஜ்ரத் ஷாஹ் இஹ்ஸôனுல் ஹக் கான் சாஹிப் அவர்களுக்கு பைஅத்தும் அருளினார்கள். ஹஜ்ரத் ஷாஹ் இஹ்ஸôனுல் ஹக் கான் சாஹிப் மத்த ஜில்லஹு அவர்களும் தன்னுடைய இயல்பான குணங்களை கொண்டு இமாம் (ரஹ்) அவர்களின் நியமமான வழக்கமான காரியங்கள், அவருடைய பண்புகள் நியமமான அமல்கள் மற்றும் இமாம் (ரஹ்) அவர்களின் ஒவ்வொரு அசைவையும் கூர்ந்து கவனித்து தானும் தன்னை அதே வழியில் ஆட்படுத்திக் கொண்டிருந்தார்கள். தொழுகை, குர் ஆன் திலாவத் (ஒதுதல்) ஜிக்ரு, துஆ, யாரையும் சந்தித்து சம்பாஷித்தல் மற்றும் இமாம் (ரஹ்) அவர்களின் சகலவித பண்பாதி குணாதிசயங்களை அதேபோன்று தன்னிலும் ஏற்படுத்திக் கொண்டார்கள். அதாவது தனதாக்கிக் கொண்டார்கள்.
அல்லாஹ்வின் நாட்டம் மற்றும் விருப்பத்திற்கேற்ப சகல காரியங்களையும் செய்யும் தகுதி பெற்றிருந்தார்கள், அத்தகைய ஆத்மீக பூரணத்துவமும் பெற்றிருந்ததார்கள். மேலும் இந்த ஸில்ஸிலாவை முன்னின்று நடத்திச் செல்லும் தலைமைத் தகுதியும் பெற்றுள்ளார்கள்.
இறைவனின் நாட்டப்படி 1997ம் ஆண்டு மார்ச் மாதம், 20 ந் தேதி ஷைகுத் தரீகத் அல்ஹாஜ் மௌலானா அஸ்ராருல் ஹக் கான் சாஹிப் (ரஹ்) அவர்கள் இறைவனடி எய்திய போது, அன்னாரால் தனக்கு அருளப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்றுவதில் முழு மூச்சுடன் செயல்படலானார்கள். தன்னுடைய மேலான ஆத்மீகம், பண்பாடு, குணாதிசியங்கள், நியமமான அமல்கள், அழகான முன்மாதிரி இவைகளைக் கொண்டு இறைவனின் படைப்பான இம் மனிதவர்க்கத்தினரின் இதயங்களைப் பீடித்துள்ள நோய்களைப் போக்கும் பொறுப்பையும் கடமையும் சிரமேற் கொண்டுள்ளார்கள்.
லோகாதய கல்வி சம்பந்தப்பட்டவரை, தனது ஆரம்பக் கல்வியை ஆஜம்கட் ஷிப்லி தேசிய இன்டர் காலேஜிலும், பின்னர் தனது இளநிலை பட்டப் படிப்பையும் முதுநிலைப் பட்டப் படிப்பையும் சமூகவியல் படிப்பில் பட்டத்தையும் ஷிப்லி தேசிய போஸ்ட் கிராஜீவேட் காலேஜிலும் படித்து பெற்றார். ஜோன்பூரில் உள்ள புர்வான்சல் யுனிவர்ஸிடியில் தன்னுடைய Ph.D., படிப்பை முடித்துக் கொண்டார்கள்.
© Central Khanquah Asrariya, Azamgarh,UP,India. All rights reserved throughout the world.