In the name of Allah the most gracious, the most merciful

ஸில்ஸிலயே ஷாஹியா அஸ்ராரியா
எனும் ஞான மார்க்கத்தின் ஆன்மீகத் தொடரின்
ஞானகுருவின் (இமாம்)அறிமுகம்

சமீபகால சீர்திருத்தவாதி ஷெய்குத் தரீகத் அல்ஹாஜ் இமாம் ஹஸ்ரத் முர்ஷிதினா மௌலானா அஸ்ராருல் ஹக் கான் சாஹிப் (ரஹ்) அவர்கள் இந்தியாவில், உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள ஆஜம்கட் மாவட்டத்தின் மங்க்ராவான் என்ற கிராமத்தில் 1949 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ம் தேதியன்று பிறந்தார்கள். அவருடைய தாய் வழிப் பாட்டனாரான ஷெய்குத் தரீகத் அல்ஹாபிஸ் ஹஜ்ரத் மௌலானா முஹம்மத் ஸயீத்கான் சாஹிப் (ரஹ்) அவர்கள், இமாமின் பால்ய பருவம் முதற்கொண்டு தமது கண்காணிப்பில், திறமையான போதிப்பு முறையில் கல்வி பயிலச் செய்தார்கள். பாட்டனார் அவர்கள் லோகாதய மற்றும் ஆன்மீக கல்வியில் தேர்ச்சியும் திறமையும் பெற்றவர்கள். மிகவும் கண்டிப்பானவர்கள். இறைவன் வழியில் தம்மை முழுமையாக அர்பணித்துக் கொண்டு அல்லாஹ்வின் அன்பும் நெருக்கமும் நாடி வருபவர்களுக்கு நேர்மையான வழிகாட்டியாக இருந்தவர்கள்.


போதனையும் வளர்ப்பும்:

மதிப்பு மிகு பாட்டனார் அவர்கள் தமது கண்காணிப்பின் கீழ் இமாம் அஸ்ராருல் ஹக் கான் சாஹிப் (ரஹ்) அவர்களின் லோகாதய கல்வி, ஆன்மீக ஞானம் மற்றும் சமுதாய அறிவு ஆகியவற்றை மேம்படுத்தினார்கள். இமாம் (ரஹ்) அவர்கள், இளநிலை ஆசிரியர் பட்டப்படிப்பு, (இ.ஊக்.,) மற்றும் சட்டக் கல்வி (க.கஇ)யை ஆஜம்கட் ஷிப்லி தேசிய மேல்நிலைக்கல்லூரியில் படித்து முடித்தார். தேசிய மாணவர் படை பயிற்சியிலும் தேர்ச்சி பெற்று, துணைகமாண்டராக நியமனம் பெற்றார்கள். நைநிடாலுக்கு அருகிலுள்ள பணி மூடிய இமயமலையின் சிகரம் ஒன்றை, தமது குழுவுடன் சென்று அடைவதில் வெற்றி பெற்றார்கள். இவரது திறமையை ராணுவ மேலதிகாரியான லெப்டினென்ட் கர்ணல் எச்.எஸ். மன்ஜானி அவர்கள் இவ்வாறு பாராட்டினர்

A TALL AND IMPERSSIVE CADET SUCCESSFULLY
COMPLETED TRACK TO THE ‘PINDARI GLACIER’
AND IS ABLE TO INFLUENCE UNDER HIS COMMAND
BY HIS PERSONAL EXAMPLE .......Date 1.05.1967 to 21.05.1967

இமாம் (ரஹ்) அவர்கள், தமது ஞானகுருவான பாட்டனாரின் திருச் சமூகத்தில் இருந்து கொண்டு ஆன்மீகத் துறையிலும், புறக்கல்வியிலும் பெரும் வளர்ச்சி அடையப்பெற்றார்கள். பாட்டனார் அவர்கள், தமது குருநாதர் ஷெய்குத் தரீகத் அல்ஹாஜ் ஹஜ்ரத் ஹாமித்ஹசன் அலவி (ரஹ்) அவர்களைச் சந்திக்க, ஆஜம்கடில் உள்ள கோஹண்டாவிற்குச் செல்லும் போதெல்லாம், தமது பேரனையும் அழைத்துச் செல்வது வழக்கமாக இருந்தது. பீர் (குருநாதர்) அவர்களின் ஆன்மீக போஷாக்கு சக்தியால்(நிஸ்பத்) இமாம் (ரஹ்) அவர்கள் பெரும் பயனடைந்தார்கள்.

ஆத்மீக தேர்ச்சியும் முன்னேற்றமும்:

அல்லாஹ்வின் அருளாலும், ஆன்மீகப் பெரியார்களின் அருட் பார்வையாலும் இமாம் (ரஹ்) அவர்கள் ஆன்மீகத்தில் மிக உயர்ந்த நிலையை அடைந்தார்கள். உலகில் ஒரு சிலருக்கே இத்தகைய உயர்வும் சிறப்பும் கிடைக்கிறது. எல்லாம் வல்ல அல்லாஹ் இமாம் (ரஹ்) அவர்களை மிக அழகானவராகவும் மாட்சிமை மிக்கவராகவும் படைத்து இருந்தான். சிவப்பான நிறமும் ஒளிர் மிகுந்த முபாரக்கான கவர்ச்சிகரமான முகமும், எடுப்பான அகன்ற முபாரக்கான நெற்றியையும், ஒளிர் மிகுந்த சுருள் முடி கொண்ட அடர்ந்த தாடியும் கொண்டுயிருந்தார்கள். (அவர்களின் தோற்றத்தை எழுத்தால் வர்ணிக்க முடியாது) இமாம் (ரஹ்) அவர்கள் மிகுந்த ஒழுக்கச் சீலராகவும், நபிமணி (ஸல்) அவர்களில் நல்வழியை, (சுன்னத்தை) முழுமையாகப் பேணி நடப்பராகவும் இருந்தார்கள்.


இமாம் (ரஹ்) அவர்களுடைய சமூகத்தில், அருள்மாரியும் சாந்தியும் எந்நேரமும் பொழிவதை அவருடைய சமூகத்தில் அண்மியிருந்த சீடர்களும் அன்பர்களும் உணரவும் அனுபவிக்கவும் செய்தார்கள். இதய விழிப்புணர்வு பெற்றவர்கள் இதனால் பலனும் அடைந்தார்கள். இறைவன் கொடைகளில் அருள் நிகழ்வு, கடவுள் அருள் வெளிப்பாடு, கனவில் அருட் காட்சிகள் காணுதல் ஆகிய நற்பாக்கியங்களைப் பெற்றிருந்தார்கள். இந்நிலை நபித்துவத்தின் நாற்பத்தி ஆறாவது பகுதி நிலையாகும். இமாம் (ரஹ்) அவர்கள் தெய்வீக வெளிப்பாடுகளை தன்னுடைய உள்ளத்தில் அடையப் பெற்றவர்களாகவும், அல்லாஹ்வின் திரு நாமம் தன்னுடைய கல்பில் பொறிக்கப்பட்டவர்களாகவும் இருந்தார்கள். இமாம் (ரஹ்) அவர்களுடைய எல்லா காரியங்களிலும் அல்லாஹ்வின் அருளுதவி கிடைத்து கொண்டிருந்தது ஒரு கண்கூடான காட்சியாகும். பொறுமை, சகிப்புத்தன்மை, மன்னிக்கும் மனப்பான்மை, பணிவு, உபசரிப்பு போன்ற மேலான குணங்கள் அவர்களிடம் இருந்தன. அல்லாஹ்வின் பேரில் உறுதியான நம்பிக்கையில் (தவக்கல்) இணையற்றவர்களாக இருந்தார்கள். ரஸூலுல்லாஹ்(ஸல்) அவர்களின் உம்மத்து பற்றிய இடைவிடாத கவலையும், அவர்களின் உயர்வு, மீட்சி ஆகியவற்றில் சதா அக்கரையும் கொண்டிருந்தார்கள்.


அன்னாருடைய சிறப்புகளையும் நற்பண்புகளையும் சிறிதும் மிகைப்படுத்தாமல் மிக மிகச் சுருக்கமாக விளக்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. அப்படியும் இதில் எதும் தவறுகள் இருந்தால் அல்லாஹ் நம்மை மன்னிப்பானாக. அவர்கள் உண்மையில் ஒரு முழுமையான முற்றிலும் தேர்ச்சி பெற்ற மனிதராகவும் இறைவனுக்காகத் தம்மை முழுதும் அர்ப்பணித்துக் கொண்டவர்களாகவும் இருந்தார்கள். திருக்குர் ஆனில் கூறி இருப்பது போல்:

(யாவற்றிலும்) என்னையே நோக்கி நிற்போரின் வழியையே நீ பின்பற்றுவாயாக
சூரா : லுக்மான் (அல்குர்ஆன்) 31:15

இதனால்தான் இறையடியார்கள் இமாம் (ரஹ்) அவர்களின் மேலான சமூகத்தில், அவருக்கு கீழ்ப்படிந்தவர்களாகவும் பின்பற்றுபவர்களாக இருப்பதில் பெருமை கொண்டார்கள். அன்னாருடைய சமூகத்தில் (சொஹ்பத்தில்) இறையன்பு மற்றும் அல்லாஹ்வின் பூடகமாக மர்மங்களின் ஞானச் சுவையை உணரவும் செய்தார்கள். இதை அவர்கள் தங்களின் கல்பிலும் (இதயத்தில்) ஒளிர்வதையும் கண்டார்கள்.

சேவைகள்:

1973 ம் வருடம் 16 நவம்பர் வெள்ளிக்கிழமை இமாம் (ரஹ்) அவர்களின் ஞான குரு அவர்கள், மனித வர்க்கத்தார் அனைவருக்கும் நற்போதனைகளை பயிற்றுவிக்கும் வழிகாட்டியாக அங்கீகரித்து பிரகடனம் செய்தார்கள். குருநாதர் 30 ஜனவரி 1976 ல் இயற்கை எய்திய பிறகு அவர் விட்டுச் சென்ற பொறுப்புகளை நிறைவேற்றுவதிலும், அந்த அரிய பொக்கிஷத்தை நற்பாக்கியம் பெற்ற மக்களுக்கு வழங்குவதிலும், சகல சுகங்களையும் உதறித் தள்ளிவிட்டு, தம்மை முழுமையாக அர்பணித்துக் கொண்டார்கள். இவருடைய பயணங்களும், கூட்டங்களும், சொற்பொழிவுகளும் மக்களை இந்த உலகின் ஆசாபாசங்களிலிருந்து விடுவித்து இறைவன் பக்கம் சேர்ப்பவைகளாகவே அமைந்தன. மக்களுடைய உள்ளங்களை பகுத்தறிந்து பரிசுத்தப்படுத்துவதில் மிகவும் அக்கரை காட்டினார்கள், இந்த ஒரு வேலையைத் தவிர வேறு எந்த லோகாதயப்பணியும் இருக்கவில்லை. அல்லாஹ்வுக்காக, தொழுகை, நோன்பு, தியானம் (ஜிக்ர்), ரமலான் மாதத்தில் இஃதிகாஃப் (எனும் தனித்திருக்கும் அனுஷ்டானம்), ஹஜ், உம்ரா போன்ற புனித யாத்திரைகள் ஆகிய எல்லா வற்றையும் தவறாமல் கடைப்பிடித்து வந்தார்கள். இந்தக் கடமைகளை முழுமனதுடன் நேர்மையாகவும், உறுதியோடும் நிறைவேற்றி வந்தார்கள். அவருடைய கடினமான உழைப்பாலும், பெரு முயற்சியாலும் 21 ஆண்டுகள் கொண்ட குறுகிய காலத்தில் அவருடைய ஆன்மீகத் தொடர் (ஞானமார்ககம்) உலகில் கிழக்கு முதல் மேற்கு வரை பரவியது, அவருடைய சீடர்களும், சேவகர்களும் அவருடைய செய்தியையும் அழைப்பையும் எல்லா திக்குகளிலும் பரப்பிக் கொண்டிருந்த வேளையில் அல்லாஹ் ஜல்லெ ஷானஹூ இமாம்(ரஹ்) அவர்களை 20 மார்ச் 1997, வியாழக்கிழமை அன்று தன்னகத்தே திரும்ப அழைத்துக் கொண்டான்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்

© Central Khanquah Asrariya, Azamgarh,UP,India. All rights reserved throughout the world.

Comprare VPXL Comprare Red Viagra Comprare Cialis Jelly Comprare Levitra With Dapoxetine Comprare Cialis Super Comprare Kamagra Jelly Comprare Propecia Comprare Viagra Comprare Viagra Professional Comprare Cialis Professional Comprare Female Viagra Comprare Levitra Comprare Viagra Super Comprare Viagra Gold Comprare Kamagra Gold Comprare Tadalis SX Comprare Cialis Comprare Priligy Comprare Kamagra in nederland hvor kjøpe generisk cialis på nett i Norge
adidas yeezy adidas superstar adidas yeezy 350 boost adidas nmd r1 adidas superstar damen adidas tubular adidas nmd adidas zx flux damen adidas tubular nova adidas zx flux adidas gazelle homme adidas stan smith pas cher adidas superstar pas cher adidas nmd r1 adidas yeezy boost 350 prix adidas superstar femme adidas stan smith femme adidas yeezy boost 350 adidas nmd runner adidas gazelle femme in nederland hvor kjøpe generisk cialis på nett i Norge