ஆன்மீகக் கல்வி
வெளிப்படையான கல்வியில், மூளையின் சக்தியை அதிகரிக்க வழிவகைகள் செய்யப்படுகின்றன அதனால் மனிதனின் திறமைகள் வெளிப்படுகினறன. கூரறிவும் மெருகேற்றப்படுகிறது. மனிதன் கடுமையாக உழைத்து கல்வியிலும் கலைகளிலும் தேர்ச்சி பெற்று, சீர்திருத்தம் மற்றும் முன்னேற்றத்தின் உயர் படிகளைக் கடந்து சிறப்புகளை அடையப் பெறுகிறான். இதைப் போலவே இஸ்லாத்தின் ஆன்மீகத் துறையிலும் கல்பு மற்றும் ஆன்மாவைக் (ரூஹ்) கொண்டு உழைக்க வேண்டியுள்ளது. இஸ்லாமிய ஆன்மீகப் பெரியார்களின் சீரிய நெறிமுறைகளின் படி தொடர்ந்து செயல்பட்டு உழைத்தால் மனிதனின் தகுதிகள் வெளிப்படுகின்றன. அந்த மனிதன் ஆன்மீக மனிதன் எனப்படுகிறான். ஆன்மீகக்கல்விகள் பலன்களும் பயன்களும் கணக்கிலடங்கா. அவை இவ்வுலக வாழ்விலும் மரணத்திற்குப் பிறகு மறுமையிலும் கிடைக்கின்றன.
ஆன்மீகக் கல்வி மட்டுமே மதம், இம்மை, மறுமை ஆகியவற்றின் பலன்களும் வெற்றிகளும் அடைவதற்கான வழியாகும். இன்று உலகத்தில் மக்களும் மக்கள் குழுக்களும் ஆன்மீகக் கல்வி பெறாத காரணத்தால் ஒருவகையான அமைதியில்லாத நிலையில் வாழ்கிறார்கள். ஒருவர் மற்றொருவருடன் வஞ்சகம், சூழ்ச்சி, பொறாமை, விரோதம், துன்புறுத்தல், ஆதிக்கப்போக்கு போன்ற தீயச் செயல்களைப் புரிவதில் துடிப்புடன் இருக்கிறார்கள். இதன் காரணமாக அவர்கள், எல்லா சுகங்களும் சௌகரியங்களும் கேளிக்கைகளும் இருந்த போதிலும் உண்மையான நிம்மதி கிடைக்காமல் தவிக்கிறார்கள். மற்றொரு விஷயம் என்னவென்றால் இந்த உலகத்தின் எல்லா பொருள்களும் அழிந்து விடக் கூடியவை. உலக வாழ்க்கையில் இப்பொருள் அற்ப சுகம் தருபவைகளாகவும், தேவையானதாகவும் இருக்கின்றன. அதனால் மனிதன் அவற்றினை நேசிக்கிறான். ஆனால் அவை அழிந்து விடும் போது மனிதன் ஒரு வகையான துயரத்திலும் வேதனையிலும் மூழ்கி விடுகிறான்.
ஆன்மீகத்தில் உண்மையான எஜமானனிடம் மனிதன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு அதை உறுதிப்படவும் செய்கிறான். எழுபது அன்னையரை (தாயை) விட அடியானை நேசிக்கும் இறைவன் நீதி தவறாதவன், கருணையாளன், என்றும் அழியாதவன். இத்தகைய இறைவனுடன் மனிதனின் உறவு ஏற்படும் போதுமனிதனுக்கு உண்மையான அமைதி கிடைக்கிறது. ஏனெனில் மனிதர்களிள் உள்ள அசலான பொருள் ரூஹாகும் அது அல்லாஹ்வின் கட்டளை ஆகும்.
அது தன்னுடைய பிறப்பிடமான கேந்திரத்துடன் தொடர்பு கொள்ளும் போது உண்மையான நிம்மதி கிடைக்கப் பெறுகிறது.
ஆன்மீகக் கல்வி மூலம் மனிதனின் ஆன்மா பிரபஞ்சத்தில் (ஆலமெ நாசூத், ஆலமெ மலகூத், ஆலமெ ஜபரூத்) ஆகிய சகல லோகங்களில் சஞ்சரிக்கும் அரிய வாய்ப்பு கிடைக்கிறது திறமைவாய்ந்த ஆன்மீக வாதிகள் இந்த லோகங்களை வென்று அவற்றினை சுவாதீனப்படுத்திக் கொள்ளும் நற்பாக்கியமும் பெறுகிறார்கள்.
ஆன்மீகக் கல்வி மூலம் மனிதன் தீய வழக்கங்களிலிருந்து விடுபட்டு ரஹ்மானி, மலகூதி எனும் கல்யாண குணங்களையும் தன்மைகளையும் பெற்று உயர்வு அடைகிறான். இத்தகைய மனித சிரேஷ்டர்களின் செயல்கள் அவர்களின் மறைவுக்குப் பிறகும் மறக்கப்படுவதில்லை. அவர்களின் சரிதைகள் நூல்கள் வடிவில் வெளியிடப்படுகின்றன மக்கள் அவர்களைக் கொண்டாடுகிறார்கள். அல்லாஹ்வும், அவர்களுடைய நேசம், பற்று ஆகியவற்றிற்காக மறு உலகிலும் அளவில்லாத நற்பாக்கியங்களும் அன்பளிப்புகளும் தந்து அருள் புரிகிறான்.
ஆன்மீகக் கல்வியால் பல பலன்களும், வெற்றிகளும் கிடைக்கின்றன, நமது முன்னோர்கள் இவ்வுலகின் சுகங்களைத் துச்சமென மதித்து அல்லாஹ்வின் அன்பையும் நெருக்கத்தையுமே மேலானதாக நினைத்து இறைப் பொருத்தத்தைப் பெறுவதையே தங்கள் ஒரே குறிக்கோளாக கொண்டு வாழ்ந்தார்கள்.
நமது ஆன்மீகத் தொடரில் அளிக்கப்படும் ஆன்மீகக் கல்வி, பயிற்சிபெறுபவர்களுக்கு அவர்களுடைய குடும்பத்தார் மற்றும் குலத்தினர்களுக்கு ஆற்ற வேண்டிய உரிமைகள் பறிக்கப்படுவதில்லை. இதற்கு மாறாக அவர்களுடைய சகல லோகாதய பொறுப்புகளை நிறைவேற்ற அனுமதிக்கப்படுகிறது. தங்கள் மனதிலுள்ள உலகப் பற்று இதர இச்சைகளை நீக்கி உண்மையான படைப்பாளனும் அதிபதியுமாகிய அல்லாஹ்வின் அன்பும் நேசமும் பெறுவதற்காக ஒரு குறிப்பிட்ட நேரத்தை மட்டும் ஒதுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அந்த நேரத்தில் ஆன்மீகப் பெரியாரின் (முர்ஷதே காமில்) சீரிய நெறிமுறையைப் பின்பற்றினால் போதும். மேலும் அல்லாஹ்வின் சட்ட திட்டங்கள் படியே செயல்பட வேண்டும். சுயநலம் மற்றும் நஃப்ஸின் இச்சைகளுக்கு அப்பாற்பட்டு எல்லா காரியங்களிலும், செயலிலும் அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெற்றுக் கொள்ளும் குறிக்கோளுடன் கல்வியும் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
இந்த ஆன்மீகத் தொடரின் மகான்கள், கண்ணியமிகுந்த பல்வேறு தொடர்களில் பயிற்சி பெற்றவர்களாக இருக்கிறார்கள். ஹஜ்ரத் இமாம் ரப்பானி முஜத்தித் அல்ஃப்ஸானி ஷேக் அஹ்மத்பா(எ)ரூக்கி சர்ஹிந்தி (ரஹ்) அவர்களின் ஸில்ஸிலயே ஆலியா முஜத்ததியா; ஹஜ்ரத் கௌதுல் ஆ(க்ஷ்)ஜம் சையத் மீர் முஹையத்தீன் ஷைக் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் ஸில்ஸிலயே ஆலியா காதிரீயா; ஹஜ்ரத் காஜா முயீனுத்தீன் சிஷ்தி அஜ்மீரி (ரஹ்) அவர்களின் ஸில்ஸிலயே ஆலியா சிஷ்தியா; காஜா பஹாவுதீன் முஹம்மத் நக்ஷ்பந்தீ (ரஹ்) அவர்களின் ஸில்ஸிலயே ஆலியா நக்ஷ்பந்தியா ; ஷேக் அபுல் ஹசன் ஷாதுலி(ரஹ்) அவர்களின் ஸில்ஸிலயே ஆலியா ஷாதுலியா ; ஆகிய தொடர்களைச் சார்ந்த ஆன்மீக ஞானிகள் இருக்கிறார்கள். மேலே குறிப்பிட்ட ஆன்மீகத் தொடர்களின் ஞானநாதர்கள் அனைவரும் உலகப் புகழ் பெற்ற மகான்கள் ஆவர்.
எமது ஸில்ஸிலா ஷாஹியா அஸ்ராரியாவில் பயிற்சி ‘கல்பி’ லிருந்து ஆரம்பிக்கிறது. ஷெய்க்காமில் அவர்கள் தமது முழு கவனத்துடனும் நிஸ்பத் (எனும் ஆத்மீக அலை) மூலமும் நமக்கு ஆன்மீகப் பயிற்சி அளிக்கிறார்கள். மேலும் அவர் சொல் லிக் கொடுத்து காண்பிக்கும் முறையில் ‘முராகபா’வும் செய்யுமாறு போதிக்கப்படுகிறது. மேலும் பத்து ஸ்தானங்களைப் (லத்தாயிப்ஃ) பற்றிய பயிற்சிக்குப் பிறகு ஸூலூக் எனும் ஞானப்பாட்டையை நடத்துகிறார்கள். அதற்காக ஒவ்வொரு அசைவையும் செயலையும் ஷெய்க்காமில் தமது ஆன்மீகப் பார்வையால் கண்காணித்து வருகிறார்கள். இந்த ஞானப்பாட்டையில் பல படித்தரங்களும் அவற்றிர்கான பயிற்சிகளும் உள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக மிக மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், சாதகன்(முரீது) தனது ஷெய்க் உடைய தொடர்பும், அவர்கள் சமூகத்தில் அண்மியிருப்பதும் (சொஹ்பத்தும்) ஆகும்.
© Central Khanquah Asrariya, Azamgarh,UP,India. All rights reserved throughout the world.